'பீஸ்ட்' படம் வெளியாகும் முன்னரே குவியும் புகார்கள்

விஜய் நடித்து வெளியாக இருக்கும் 'பீஸ்ட். படத்திற்கு புகார்கள் குவிந்து வருகின்றன.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வெளிவரவிருக்கும் படம் 'பீஸ்ட்'. வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் மீது தற்பொழுது 2 புகார்கள் வந்துள்ளன, ஒன்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக உள்ளாட்சித் துறை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "முஸ்லிம்கள் மட்டும் வெடிகுண்டு துப்பாக்கி கலாச்சாரத்தை ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கு எதிராக செயல்படுவது போல திரைப்படங்களில் காட்சி இடம்பெற்றுள்ளது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து திரைப்படம் வெளியே வந்தால் முஸ்லீம்களிடையே அசாதாரண சூழ்நிலை ஏற்படும் எனவே 'பீஸட்' படத்திற்கு தடை விதித்து உத்தரவிட கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மற்றொரு புகாரில் சென்னை சென்னையை சேர்ந்த சேர்ந்த தேவராஜன் என்பவர் சமூக ஆர்வலர், இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில், "நடிகர் விஜய் நடித்துள்ள படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளார்கள். சட்டவிரோதமாக 6 காட்சிகள் திரையிட ஏற்பாடுகள் நடக்கின்றன பார்க்கிங் கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்க உள்ளனர் இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டும்" என புகார் தெரிவித்துள்ளார்.
இப்படி படம் வெளியாகும் முன்னரே 'பீஸ்ட்' படத்திற்கு புகார்கள் குவிந்து வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.