Kathir News
Begin typing your search above and press return to search.

'நானே வருவேன்' - தனுஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

நானே வருவேன் - தனுஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

Mohan RajBy : Mohan Raj

  |  11 April 2022 9:28 AM GMT

'நானே வருவேன்' படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.




இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் 'நானே வருவேன்' என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தொடர்ச்சியாக ஹிட் கொடுத்த கூட்டணியான செல்வராகவன்-தனுஷ் கூட்டணி 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இணைந்துள்ளது. கலைப்புலி தாணு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க 'நானே வருவேன்' என்ற தலைப்பில் தயாராகிவருகிறது தனுஷின் புதிய படம்.




இந்நிலையில் தனுஷ் 'நானே வருவேன்' படத்தின் அப்டேட் வெளியிட்டுள்ளார், அதாவது 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறிய தனுஷ் 'நானே வருவேன்' படத்தின் தனது கெட்டப்பின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த தேதி வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News