Kathir News
Begin typing your search above and press return to search.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் விஜய் மகன் சஞ்சய் நடிக்கிறாரா?

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் விஜய் மகன் சஞ்சய் நடிக்கிறாரா?

Mohan RajBy : Mohan Raj

  |  11 April 2022 9:31 AM GMT

நடிகர் விஜய் தன் மகன் சஞ்சய் அவர்களை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிக்க வைப்பது பற்றி தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலில் கூறியுள்ளார்.




இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'பீஸ்ட்', இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியாக தனியார் தொலைக்காட்சி ஒன்று இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் அவர்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது, அதில் இயக்குனர் நெல்சன் அவர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில் கூறினார்.




அப்போது இயக்குனர் நெல்சன் 'உங்கள் மகன் சஞ்சய் எதிர்கால திட்டம்'என்ன என கேள்வி எழுப்பினர், அதற்கு விஜய் 'இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னிடம் ஒரு கதை உள்ளது, அதில் உங்கள் மகனை நடிக்க வைக்கட்டுமா என கேட்டார்! அதற்கு என்மகன் இப்பொழுது வேண்டாம் என கூறி மறுத்துவிட்டார்' என்றார். என் மகன் நடிப்பது குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என நடிகர் விஜய் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News