Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்டோ ஓட்டுனராக புது தோற்றத்தில் சிம்பு - எந்த படத்திற்காக?

ஆட்டோ ஓட்டுனராக புது தோற்றத்தில் சிம்பு - எந்த படத்திற்காக?

Mohan RajBy : Mohan Raj

  |  12 April 2022 6:15 AM GMT

ஆட்டோ ஓட்டுனராக புதிய தோற்றத்தில் சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.




இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார், இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு அடுத்தபடியாக 'பத்துத்தல' படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு, அதன் பிறகு 'கொரோனா குமார்' படத்திலும் நடிக்கவிருக்கிறார்.




இப்படடி வரிசையாகப் படம் நடிக்கும் சிம்பு அவ்வபொழுது விளம்பரங்களிலும் தலைகாட்டி வருகிறார். தற்போது ஒரு புதிய விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சிம்பு அந்த விளம்பரத்திற்காக ஆட்டோ ஓட்டுனர் தோற்றத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ நேற்று முதல் இணையங்களில் வைரலாகி வருகிறது இதனை சிம்புவின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News