Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழில் சில நடிகர்கள் நடிக்க தயங்கிய 'ட்ரான்ஸ்' திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது

தமிழில் சில நடிகர்கள் நடிக்க தயங்கிய ட்ரான்ஸ் திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது

Mohan RajBy : Mohan Raj

  |  13 April 2022 7:30 AM GMT

சில போலி கிறிஸ்தவ மத போதகர்களின் முகத்திரையைக் கிழிக்கும் ட்ரான்ஸ் படம் தமிழில் வெளியாகவிருக்கிறது.




மலையாளத்தில் பகத் பாசில் நடித்து வெளியான படம் 'ட்ரான்ஸ்', போலி மத போதகர்களின் முகத்திரையை கிழித்த இப்படத்தில் பகத் பாசில், நஸ்ரியா, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் ரஷீத் இயக்கிய இப்படம் தற்போது தமிழில் 'நிலை மறந்தவன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.




இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய சிலர் முயற்சி செய்த போது எந்த நடிகரும் நடிக்க முன்வராததால் அந்த முயற்சி கைகூடவில்லை என தெரிகிறது, அதனாலேயே மலையாளத்தில் வெளியான படத்தை மொழிமாற்றம் செய்து தமிழில் வெளியிடுகிறார்கள். விரைவில் இப்படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News