Kathir News
Begin typing your search above and press return to search.

மலையாள நடிகர் டாம் சாக்கோவை 'பீஸ்ட்' பயன்படுத்தவில்லையா?

மலையாள நடிகர் டாம் சாக்கோவை பீஸ்ட் பயன்படுத்தவில்லையா?

Mohan RajBy : Mohan Raj

  |  14 April 2022 9:06 AM GMT

நேற்று வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்துள்ள மலையாள வில்லன் ஷைன் டாம் சாக்கோ நடிப்பு ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.





பிரபல நடிகரான ஷைன் டாம் சாக்கோ மலையாளத் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பெயர் பெற்றவர், சமீபத்தில் வெளியான 'பீஷ்ம பர்வம்' படத்தில் கூட மம்முட்டிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் இவரது திறமையான மற்றும் கவர்ந்திழுக்கும் நடிப்பால் மலையாளத் திரையுலகில் ஒரு முக்கியமான நடிகராக தற்போது வலம் வருகிறார். இவர் நடிப்பை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமே உண்டு.





அப்படிப்பட்ட ஷைன் டாம் சாக்கோ'வை தமிழுக்கு முதன்முறையாக அழைத்துவந்த 'பீஸ்ட்' படக்குழு சரியாக பயன்படுத்தாமல் வெறும் ஐந்து நிமிடங்கள் வரும் காட்சிகள் மட்டும் அவரைப் பயன்படுத்தி திரையில் காண்பித்தது படம் பார்த்த ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News