Kathir News
Begin typing your search above and press return to search.

போலி மத போதகர்களின் முகத்திரையைக் கண்டிப்பாக 'நிலை மறந்தவன்' கிழிக்கும் - ஹெச்.ராஜா

போலி மத போதகர்களின் முகத்திரையைக் கண்டிப்பாக நிலை மறந்தவன் கிழிக்கும் - ஹெச்.ராஜா

Mohan RajBy : Mohan Raj

  |  17 April 2022 9:00 AM GMT

மதமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த படம் நல்ல பாடம் என 'நிலை மறந்தவன்' படத்தைப்பற்றி எச்.ராஜா கூறியுள்ளார்.




பகத் பாசில் நடிப்பில் மலையாள மொழியில் வெளியான படம் 'ட்ரான்ஸ்' கிறிஸ்தவ போலி மத போதகர்களின் முகத்திரையைக் அப்பட்டமாக கிழித்து தொங்கவிட்ட படம் இது. இப்படத்தில் நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில் தமிழில் இப்படம் 'நிலை மறந்தவன்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.




இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது, "மதமாற்றம் செய்யும் அனைவருக்கும் இந்த படம் நல்ல பாடம். இந்தப் படம் நடப்பதை அப்படியே சொல்லி உள்ளது எதையும் வெளிப்படுத்தவில்லை. தமிழகத்தில் ரவுடியிசம் பெருகிவிட்டது" என்றார். மேலும் இப்படம் குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறும்போது, "தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் திரைத்துறையை அவர்களை கையில் எடுத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்துகின்றனர்" என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News