Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் அல்லாத பிற மொழிகளில் 'பீஸ்ட்' வரவேற்பு எப்படி?

தமிழ் அல்லாத பிற மொழிகளில் பீஸ்ட் வரவேற்பு எப்படி?

Mohan RajBy : Mohan Raj

  |  18 April 2022 9:45 AM GMT

ஐந்து மொழிகளில் வெளியான விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளில் எப்படி இருக்கிறது அதனுடைய வெற்றி என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படத்தின் பிறமொழி வசூல் விவரங்கள் வெளியாகி உள்ளன.




இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் இந்தியா முழுவதும் கடந்த 5 நாட்களில் மொத்தமாக 200 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது, இந்நிலையில் ஐந்து மொழிகளில் வெளியான விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் முடிவுகள் மற்ற மொழிகளில் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் மற்ற மொழிகளில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் வசூல் தகவல்கள் வெளியாகியுள்ளன.




தெலுங்கில் இதுவரை 12 கோடி மட்டும் வசூலித்துள்ளது 'பீஸ்ட்', அதே போல் மலையாளத்தில் 8 கோடி வசூலையும், கர்நாடகாவில் 13 கோடி வசூல் இதுவரை 'பீஸ்ட்' திரைப்படம் பெற்றுள்ளது. ஹிந்தியில் வெளியான பீஸ்ட் வசூல் நிலவரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை அதே நேரத்தில் இந்தியா அல்லாத பிற நாடுகளில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தின் வசூல் 55 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை வைத்து பார்க்கும் பொழுது தமிழில் மட்டுமே அதிக வரவேற்பை ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் 'பீஸ்ட்' பெற்றுள்ளது, மற்ற மொழிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வசூல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News