Kathir News
Begin typing your search above and press return to search.

'விக்ரம்' - மே மாதத்தில் துபாயில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

விக்ரம் - மே மாதத்தில் துபாயில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா

Mohan RajBy : Mohan Raj

  |  19 April 2022 6:45 AM GMT

உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' பட இசை வெளியீட்டு விழா துபாயில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.





இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் 3'ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது.





தற்பொழுது அதற்கு விடை கிடைத்துள்ளது, 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் கோலாகலமாக நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் மே முதல் வாரத்தில் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் கோலாகலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News