Kathir News
Begin typing your search above and press return to search.

கோடிகளில் சம்பளம் கொடுத்தும் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன் - குவியும் பாராட்டுக்கள்

கோடிகளில் சம்பளம் கொடுத்தும் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன் - குவியும் பாராட்டுக்கள்

Mohan RajBy : Mohan Raj

  |  20 April 2022 10:30 AM GMT

கோடிகளில் சம்பளம் கொடுத்தும் புகையிலை விளம்பரம் ஒன்றில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க மறுத்துவிட்டார்.




தென்னிந்திய நடிகரான அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்திற்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அறியப்படும் நடிகராகிவிட்டார். இந்தநிலையில் அல்லு அர்ஜுன் அவர்களை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன, அந்தவகையில் ரெட்பஸ், ராபிடோ என விளம்பரங்களில் நடித்து வந்த அல்லு அர்ஜுனை தேடி மிகப்பெரிய புகையிலை தயாரிப்பு பொருள் நிறுவனமொன்று அணுகியது. விளம்பரத்தில் நடிப்பதற்காக அதிகமாக சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறினர்.





ஆனால் அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டார், அதுமட்டுமின்றி தான் இந்த விளம்பரத்தில் நடித்து புகையிலை தயாரிப்பு பொருளை விளம்பரம் செய்தால் தனது ரசிகர்கள் அவற்றை அதிகம் பயன்படுத்துவதுதற்கு தானே வழி அமைத்து கொடுத்தது ஆகிவிடும் எனது ரசிகர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்ல விரும்பவில்லை என உறுதியாக இருப்பதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News