இனி பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பதில்லை - அக்க்ஷய் குமாரின் முடிவு

அக்க்ஷய்குமார் பான்மசாலா தொடர்பான விளம்பரத்தில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்க்ஷய்குமார் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு விளம்பரங்களிலும் அதிகமாக நடித்துவருகிறார், விளம்பரங்களில் நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர் சமீபத்தில் பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார், இந்த நிலையில் அவர் பான்மசாலா விளம்பரத்தில் நடிப்பதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரசிகர்களின் எதிர்ப்புக்குப் பிறகு தற்பொழுது பான்மசாலா விளம்பரத்தில் நடித்தது குறித்து பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன். கடந்த சில நாட்களாக உங்கள் ஒவ்வொருவரின் எதிர்வினை என்னை பாதித்து உள்ளது இனி இது மாதிரியான புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்' என கூறியுள்ளார்.