Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்தபடியாக தனுஷை இயக்கப்போகும் நெல்சன் திலீப்குமார்

அடுத்தபடியாக தனுஷை இயக்கப்போகும் நெல்சன் திலீப்குமார்

Mohan RajBy : Mohan Raj

  |  22 April 2022 8:15 AM GMT

தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கிவரும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்தபடியாக நடிகர் தனுஷ் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.





'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கினார். இப்படம் வெற்றி அடைந்த நிலையில் தற்போது விஜய்யை வைத்து இயக்கிய 'பீஸ்ட்' படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 படத்திற்கு படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கைகளுக்கு சென்றது இந்த நிலையில் அடுத்ததாக யார் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது ரசிகர்கள் மத்தியில்.





நடிகர் தனுஷ் அவர்களை வைத்து அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் படம் ஒன்றை இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News