Kathir News
Begin typing your search above and press return to search.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே விட ஷாகித் கபூர் செய்தது என்ன?

புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே விட ஷாகித் கபூர் செய்தது என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  23 April 2022 10:45 AM GMT

புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு உள்ளதாக நடிகர் ஷாகித் கபூர் கூறியுள்ளார்.




விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் 'அர்ஜுன் ரெட்டி' இந்த படத்தை ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்க 'கபீர்சிங்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யாமல் மறுபதிப்பு செய்து வெளியிட்டார்கள். 'கபிர்சிங்' மிகப்பெரிய வெற்றியடைந்தது கதைப்படி 'கபீர்சிங்' படத்தின் கதாநாயகன் மதுவுக்கும், சிகரெட்டும் அடிமையானவன் எனவே அதிலிருந்து மீண்டு வருவதாகவும் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில் அந்த படத்தில் நடித்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ஷாகித் கபூர் கூறியதாவது, 'கபீர்சிங்' படத்தில் நடித்த பிறகு நான் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன், அந்த படத்தில் நடித்தபோது தினமும் 20 சிகரெட்டுகள் பிடிக்க வேண்டிய சூழல் இருந்தது வீட்டிற்கு சென்றதும் மனைவியையும், குழந்தைகளையும் சந்திக்க சிறிது நேரம் கழித்து செல்லவேண்டியிருந்தது. தொடர்ந்து இப்படியே நடந்ததால் அடுத்து வந்த நாட்களில் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டேன்' என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News