Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றிகரமாக 'லத்தி' படப்பிடிப்பை நிறைவு செய்த விஷால்

வெற்றிகரமாக லத்தி படப்பிடிப்பை நிறைவு செய்த விஷால்

Mohan RajBy : Mohan Raj

  |  24 April 2022 10:15 AM GMT

விஷால் நடிப்பில் உருவாகி வந்த 'லத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.





அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் விஷால், சுனைனா நடிப்பில் தயாராகி வரும் படம் 'லத்தி', தமிழ் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டது, இருப்பினும் குணமான பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் படத்தில் நடித்து வந்தார் நடிகர் விஷால்.





இந்நிலையில் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News