Kathir News
Begin typing your search above and press return to search.

'இஸ்லாமிய பெண்ணாக நீங்கள் இப்படி நடிக்கலாமா?' - நஸ்ரியாவிடம் கேட்கப்பட்ட வில்லங்கமான கேள்வி

இஸ்லாமிய பெண்ணாக நீங்கள் இப்படி நடிக்கலாமா? - நஸ்ரியாவிடம் கேட்கப்பட்ட வில்லங்கமான கேள்வி

Mohan RajBy : Mohan Raj

  |  24 April 2022 10:00 AM GMT

'இஸ்லாமிய பெண்ணாக இருந்துகொண்டு இப்படி கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களே?' என நடிகை கேள்வி கேட்கப்பட்டதற்கு சமயோசிதமாக பதில் கூறியுள்ளார் நடிகை நஸ்ரியா.




மலையாள நடிகை நஸ்ரியா தமிழில் 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமானார், தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிப்பிலிருந்து விலகினார். இந்நிலையில் அவர் தெலுங்கில் நானி ஜோடியாக 'அண்டே சுந்தரகினி' என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார்.





இந்நிலையில் 'அண்டே சுந்தரகினி' படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்ட நஸ்ரியாவிடம், 'இஸ்லாமிய பெண்ணாக இருந்து கொண்டு படத்தில் கிறிஸ்தவ பெண் கதாபாத்திரத்தில், இந்து ஆணுக்கு மனைவியாக நடித்திருக்கிறீர்கள் எப்படி இது சாத்தியம்?' என வில்லங்கமாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நஸ்ரியா 'எனது கதை பிடித்து இருந்தது, அதனால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன் கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு நடித்தேன் அவ்வளவுதான்' என விளக்கம் அளித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News