Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமாரை அறிமுகம் செய்யும் 'கே.ஜி.எப்' நிறுவனம்

'KGF' introduces Rajkumar's grandson Yuvraj Kumar

ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமாரை அறிமுகம் செய்யும் கே.ஜி.எப் நிறுவனம்

Mohan RajBy : Mohan Raj

  |  27 April 2022 12:30 PM GMT

கே.ஜி.எப் படங்களின் தயாரிப்பு நிறுவனமான 'ஹோம்பெல் பிலிம்ஸ்' தற்போது கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன் யுவராஜ் குமாரை தங்கள் நிறுவனத்தில் அறிமுகம் செய்கிறார்கள்.






இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் யஷ், சீனிதி ஷெட்டி, சஞ்சய்தத், ரவிணா டாண்டன் நடிப்பில் வெளியான படம் 'கே.ஜி.எப் 2', இரண்டு பாகங்களாக வெளியான இந்த இரு படங்களும் கன்னட சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா வரலாற்றில் வசூல் ரெக்கார்டுகளை அள்ளிக் குவித்துள்ளது. குறிப்பாக 'கே.ஜி.எப் 2' படம் இதுவரை 900 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. இதனையடுத்து கேஜிஎப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'ஹோம்பேல் பிலிம்ஸ்' அடுத்தபடியாக பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தை தயாரித்து வருகிறது.




இந்நிலையில் கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார் அறிமுகமாகும் படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக 'ஹோம்பேல் பிலிம்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த யுவராஜ் குமார் நடிகர் ராஜ்குமாரின் இரண்டாவது மகனும் நடிகருமான ராகவேந்திராவின் மகனாவார் இப்படத்தை சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்குகிறார், மறைந்த புனித் ராஜ்குமார் யுவராஜ் குமாருக்கு சித்தப்பா முறை ஆகும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News