'நீங்கள் எதுவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாக மாற முயற்சி எடுங்கள்' - மாணவர்கள் மத்தியில் இளையராஜா வைரல் பேச்சு

By : Mohan Raj
'நீங்கள் எதுவாக மாற நினைக்கிறீர்களோ அதுவாக மாற முயற்சி எடுங்கள்' என மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியது வைரலாகி வருகிறது.
நேற்றைய தினம் தனியார் பொறியியல் கல்லூரி விழாவில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் இளையராஜா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'மாணவ, மணிகளே உங்கள் வாழ்க்கையில் நிறைய சாதியுங்கள் என்னென்ன சாதிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை எல்லாம் சாதித்து விடுங்கள் ஆனால் கனவு காணுங்கள் என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது, ஏனென்றால் கனவு என்பது பொய்! கனவு காண்பதும் பொய்! கனவில் கிடைக்கும் அறிவும் பொய்! நிஜத்தில் நடப்பதையே கனவு போல் மறைந்து விடுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அது உங்களுக்கு நினைவில் இருக்காது நீங்கள் எதுவாக வேண்டும் என நினைக்கிறீர்களோ அதுவாக மாற முயற்சி எடுங்கள் முனைப்போடு நினைப்போடு அல்லும் பகலும் இடைவிடாது உழைத்தார் நீண்ட ஆயுள், நிறை செல்வம் கிடைக்கும்' என மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார் இளையராஜா.
