Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் ஆண்டனி படத்தில் சிவாஜி கணேசன் படத்தின் ரீமிக்ஸ் பாடல் - இணையத்தில் வைரல்

விஜய் ஆண்டனி படத்தில் சிவாஜி கணேசன் படத்தின் ரீமிக்ஸ் பாடல் - இணையத்தில் வைரல்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Sep 2022 3:33 PM GMT

விஜய் ஆண்டனியின் 'கொலை' படத்தில் சிவாஜி கணேசன் படத்தில் வெளியான பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.




விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கொலை'. படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார், ரித்திகா போலீஸ் அதிகாரியாக நடக்கிறார்.




இப்படத்தில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'புதிய பறவைகள்' படத்தில் இடம் பெற்ற பாடலை 58 வருடங்களுக்கு பிறகு ரீமிக்ஸ் செய்துள்ளனர். புதிய பறவைகள் படத்தில் இடம் பெற்ற. பார்த்த ஞாபகம் இல்லையோ' பாடல் ரீமிக்ஸ் செய்து தற்போது வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News