Kathir News
Begin typing your search above and press return to search.

மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் லெஜெண்ட் சரவணன்!

மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் லெஜெண்ட் சரவணன்!

Mohan RajBy : Mohan Raj

  |  13 March 2023 6:41 PM GMT

மிகவும் ஸ்டைலாக போல் தோற்றமளிக்கும் லெஜெண்ட் சரவணன் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக வலம் வருகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் வியாபார நிறுவனங்களின் அதிபர் லெஜெண்ட் சரவணன் அவ்வப்போது அவருடைய நிறுவனத்தின் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்தார், நடித்தது அல்லாமல் அவ்வப்போது அவரது வியாபார நிறுவனம் பற்றிய பேட்டிகளிலும் பங்கேற்று வந்தார். திடீரென சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது, இதன் காரணமாகவே அவர் 'தி லெஜெண்ட்' என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட அந்த படம் தற்பொழுது ஓ.டி.டி'யிலும் வந்துள்ளது. இந்த நிலையில் சரவணன் தனது ட்விட்டர் பதிவில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 'தி லெஜெண்ட் சரவணனா இது என அனைவரும் வியந்து பார்க்கும் அளவிற்கு அந்த புகைப்படத்தில் மிகவும் வசீகரமான தோற்றத்தில் இருந்தார் லெஜெண்ட் சரவணன். குறிப்பாக இவரது அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இவரது அடுத்த படத்தின் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News