Kathir News
Begin typing your search above and press return to search.

'என்ன நடந்தாலும் நான் பார்த்துகிறேன்' - கமலாலயத்தில் கர்ஜித்த அண்ணாமலை!

என்ன நடந்தாலும் நான் பார்த்துகிறேன் - கமலாலயத்தில் கர்ஜித்த அண்ணாமலை!
X

Mohan RajBy : Mohan Raj

  |  19 March 2023 10:42 AM GMT

'எது நடந்தாலும் சரி நான் இருக்கிறேன் பார்த்துக் கொள்கிறேன்' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்றைய பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் கூறியது தமிழக பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

தற்பொழுது உள்ள தமிழக அரசியல் சூழ்நிலையில் தமிழக பாஜக வளரும் கட்சி! வளர்ந்த கட்சி! என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளது. குறிப்பாக இதற்கு முன்னால் எல்.முருகன், தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் தலைவர்களாக இருக்கும் பொழுது பாஜக கட்சி வளர்ந்து கொண்டிருந்தது. கட்சியில் புதிதாக ஆட்கள் வருவார்கள் மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவில் வந்து இணைந்தார்கள். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் என்ற பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது, இந்த பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டதுமே தமிழக அரசியல் களம் சற்று ஆச்சரியத்துடன் பாஜகவை பார்த்தது, ஏனென்றால் குறிப்பாக 36 வயதான இளைஞர் ஒருவரை ஒரு தேசிய கட்சி மாநில தலைவராக அமர்த்துகிறது.

மேலும் அவருக்கு அரசியல் அனுபவம் ஏதும் கிடையாது, ஒன்பது ஆண்டுகள் ஐபிஎஸ் பதவியில் இருந்து விட்டு மட்டும் வந்திருக்கிறார். இவரை வைத்து எப்படி ஒரு தேசிய கட்சி மாநிலத்தில் வளரப்போகிறது என்று அனைத்து கட்சிகளும் பார்த்தனர்! ஆனால் சில அரசியல் பார்வையாளர்கள், வருங்காலத்தையும் கணிக்க கூடிய ஒரு சில அரசியல் விமர்சகர்கள் 'அண்ணாமலை சாதாரண ஆள் கிடையாது, அவரின் நோக்கம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் கண்டிப்பாக அண்ணாமலை காலத்தில் தமிழகத்தில் பாஜக நிச்சயம் காலூன்றும்' என அப்பொழுதே கூறினார்கள். மேலும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பை அண்ணாமலை ஏற்றதிலிருந்து கட்சி எந்த அளவிற்கு வளர்ந்ததோ அந்த அளவிற்கு கட்சியை சுற்றி சர்ச்சைகளும் வளர்ந்தன.

குறிப்பாக கட்சியின் மேல் அவதூறு பரப்பும் நோக்கில் வெளியிலிருந்து சிலர் கூறியதும் விமர்சித்தும், அவதூறு கூறியதும், கட்சியில் நடப்பது சரியில்லை, எங்களுக்கு மரியாதை இல்லை என்பது கருத்துக்களை முன் வைத்ததும், இதனை வைத்து ஊடகங்கள் விவாத நிகழ்ச்சிகள் நடத்தி பாஜக அழியும் நிலையில் உள்ளதா? தமிழக பாஜக ஏன் இப்படி செல்கிறது? அண்ணாமலை வந்ததற்கு பிறகு தான் இவ்வளவும்! என்கின்ற ரீதியில் அதிகபட்ச விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, கட்சி இன்று குறிப்பாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கணிசமான அளவிற்கு நிர்வாகிகளை மட்டுமல்லாத தொண்டர்களையும் ஈர்த்துள்ளது. இவை அனைத்தும் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதிலிருந்து வேகமாக நடந்துள்ளது.

மேலும் கட்சியை விட்டு சென்ற ஒரு சிலர் கூறிய கருத்துக்கள் பொய் என்பது என்பதை அண்ணாமலை அடிக்கடி நிரூபித்து வருகிறார். என்னதான் பொதுவெளிகளும்! சமூக வலைதளத்திலும் பாஜக மீது அவதூறு பரப்பப்பட்டு வந்தாலும் கட்சி என்று வளர்ந்துள்ளது என திராவிட காட்சிகளே ஒப்புக்கொள்ளும் அளவிற்கு உள்ளது. அண்ணாமலை தலைமை சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் கட்சியை சரியான பாதையில் அழைத்துச் செல்கிறார் என உணர்ந்த தேசிய தலைமை கர்நாடகா போன்ற பெரிய மாநிலத்திற்கு மேற்பார்வையாளராக அண்ணாமலையை நியமித்தது.

இந்த நிலையில் அண்ணாமலை கர்நாடக சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி தமிழக பாஜக நிர்வாகிகளை கமலாலயத்தில் அழைத்துப் பேசினார். நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில் முக்கியமாக அண்ணாமலை கூறியது 'கட்சிக்கு வெளியில் இருந்து நிறைய பேர் வருவார்கள், நம்மிடமிருந்து நிறைய பேர் செல்வார்கள் கட்சியின் மீது விமர்சனங்கள் வைக்கப்படும்! பலர் மீது அவதூறு பரப்பப்படும் இவை அனைத்தும் நம்மை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடக்கூடாது நான் இருக்கிறேன் பார்த்துக்கொள்கிறேன் நமக்கு இலக்கு எல்லாம் 2024 தேர்தலில் தமிழக பாஜக கூட்டணி 25 எம்பிக்களை பெற வேண்டும் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர வேண்டும்! 2026 இல் தமிழக பாஜக அதிக அளவிலான எம்.எல்.ஏக்களை பெற வேண்டும். எது நடந்தாலும்! எது குறுக்கே வந்தாலும்! எது உங்களை தடுத்தாலும் நமது இலக்கை நோக்கி செல்வதை மட்டும் குறிக்கோளாக வைத்திருங்கள். அதை விடுத்து பிறர் கூறும் கருத்துக்களுக்கு செவி சாய்க்காதீர்கள்! கட்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது, எப்பொழுது எதிரிகள் முகாமில் இருந்து நம் மீது அதிகமாக அவதூறு பரப்பப்படுகிறதோ அப்போது நான் சரியான பாதையில் சேர்ந்து கொண்டிருக்கிறோம் என பொருள்' யாரும் நம்மளை கண்டுகொள்ளாமல் இருந்தால் தான் நான் போகும் பாதை தவறு என அர்த்தம் நம்மை நோக்கி எல்லாரும் தாக்குகிறார்கள் நம் மீது விமர்சனங்கள் வைக்கிறார்கள் என்றால் நாம் போதும் பாதை சரியானது தான். எனவே உங்கள் பணியை நம்புங்கள்! கட்சிக்காக புதிதாக வருவார்கள், இருப்பார்கள், செல்வார்கள் என்ற அச்சத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். யார் வந்தாலும் யார் சென்றாலும் கட்சி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதுதான் உண்மை இந்த உண்மையை புரிந்து கொண்டு வேலை பார்க்க தொடங்குங்கள்' என அண்ணாமலை பேசியது தமிழக பாஜக நிர்வாகிகளை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News