Kathir News
Begin typing your search above and press return to search.

படக்குழுவினருக்கு கீர்த்தி கொடுத்த சர்ப்ரைஸ்!

படக்குழுவினருக்கு கீர்த்தி கொடுத்த சர்ப்ரைஸ்!

Mohan RajBy : Mohan Raj

  |  24 March 2023 6:35 AM GMT

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற மார்ச் 30-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மனதை கவர்ந்த கதாபாத்திரம் என்பதால், தசரா படத்துக்காக உழைத்த அனைவருக்கும் மறக்க முடியாத பரிசை கீர்த்தி சுரேஷ் வழங்கியுள்ளார்.

படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கும் தலா 10 கிராம் தங்க நாணயத்தை கீர்த்தி சுரேஷ் பரிசாக வழங்கியுள்ளார். தற்போதைய தங்க விலையை கணக்கிட்டு பார்த்தால் கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள தங்க நாணயங்களின் மொத்த மதிப்பு 75 லட்ச ரூபாயாகும். சுமார் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசை படக்குழுவுக்கு வழங்கியுள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News