Kathir News
Begin typing your search above and press return to search.

லேடி சூப்பர் ஸ்டாரின் சிவன் பக்தியால் குழந்தைக்கு வைத்த சிறப்பு பெயர்கள்!

லேடி சூப்பர் ஸ்டாரின் சிவன் பக்தியால் குழந்தைக்கு வைத்த சிறப்பு பெயர்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  5 April 2023 1:40 AM GMT

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான ஆக்டிங் வெளிப்படுத்தி ஒவ்வொரு கேரக்டர் தாங்கி பிடிச்சு எல்லாத்துக்கும் ப்ரூவ் பண்ணி காமிச்ச ஒரு ஹீரோயின் நம்ம லேடிஸ் சூப்பர் ஸ்டார். இவங்க தன்னோட கேரியரியர்ல பல அப்சென்ட்டவுன்ஸ் வந்தாலும் இப்ப அவங்க அடைந்த ஒரு நிலைய யாராலும் அசைக்கவே முடியாது. பல கிசுகிசுக்களை வதந்திகளையும் தாண்டி வந்த நம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு ஒரு அன்பான பாசமான லவ்வபில் ஹஸ்பண்ட் கிடைச்சிருக்காரு. எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான் ரொம்ப காலமா காதலிச்சுட்டு வந்து அதுக்கப்புறம் சென்னை மாமல்லபுரத்தில் கிராண்டா கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.

கல்யாணம் முடிஞ்சு கொஞ்சம் மாசத்துல இவங்க தங்களோட குழந்தைகளை அறிமுகப்படுத்தினார்கள் எல்லாருக்கும் ஒரே ஷாக்கிங் என்னடா இது எப்படி அப்படின்ற ஒரு குழப்பத்துல தமிழ் சினிமா மட்டுமல்ல தமிழ் மக்களையும் ஆட்டி வச்சிட்டாங்க, அதுக்கப்புறம் மருத்துவர்களின் எல்லா ஆலோசனையும் பெற்ற அப்புறம்தான் தங்களோட ரெண்டு குழந்தைகளையும் வாடகத்தாய் மூலமாக பெற்றோம் அப்படிங்கறத தெளிவு படுத்தினாங்க. நயன்தாரா அண்ட் விக்னேஷ் சிவன் தங்களுடைய குழந்தைகளை ரொம்ப பொத்தி பொத்தி வச்சிடுவாங்க இன்னமும் மீடியாவுக்கு அவங்களோட முகங்களை சரியாக காட்டக்கூட இல்லை இந்த நிலையில் அவங்களோட பெயர்களை அறிவித்து இருக்காங்க உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன். ரொம்ப டிஃபரண்டா இருக்குல, இவங்களா ஒவ்வொன்னா தேடி தேடி கண்டுபிடித்திருப்பாங்க போல இந்த ட்வின்ஸ் ஓட பேர்ல N அப்படிங்கறது அந்த குழந்தைகளோட லவ்வபில் அண்ட் உலகத்திலே சிறந்த தாயான நயன்தாராவை குறிக்கிறது அப்படின்னு விக்னேஷ் சிவன் அவரோட ட்விட்டர்ல சொல்லிருக்கார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News