Kathir News
Begin typing your search above and press return to search.

முகப்பருவால் தாழ்வு மனப்பான்மை - சாய் பல்லவி!

முகப்பருவால் தாழ்வு மனப்பான்மை - சாய் பல்லவி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 April 2023 1:47 PM GMT

அழகப்பத்தி அதிகமா அக்கறைப்படுவதும் அதுக்காக நிறைய மெனக்கெடுறதும் ஆண்களை விட பெண்கள் தான் பண்ணுவாங்க, ஆனா இந்த காலத்துல சில ஆண்களுமே அவங்களோட அழகை பராமரிப்பதற்கு சில வேலைகளும் செஞ்சுகிட்டு தான் இருக்காங்க, உன் முகத்தை அழகா பாத்துக்கணும் என்பதற்கு முதல் தடையா வர்றது முகப்பருக்கள் தான் அப்படின்னு சிலபேர் நினைச்சுட்டு இருக்காங்க, ஆனா அந்த முகப்பருக்களை அப்படியே விட்டா காலப்போக்கில் மறைந்துடும், இப்படி முகப்பருக்காக வருத்தப்பட்ட ஒரு ஹீரோயின் இருந்திருக்காங்க, யாருன்னு யோசிக்கிறீங்களா இப்ப நேச்சுரல் பியூட்டியா எல்லாரோட மனசுல மலர் டீச்சரா இன்னமும் வளம் வந்துட்டு இருக்குற நம்ம சாய் பல்லவி தான்.

அதாவது இவங்க ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும்போது அவங்க முகங்களில் நிறைய பருக்கள் இருந்திருக்காம் அதனால அவங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வந்திருக்கு அது மட்டும் இல்லைங்க அவங்க குரலும் சரியா இல்லன்னு அவங்களே சொல்லி இருக்காங்க, அந்த நிலையில பிரேமம் படத்தில் நடிச்சேன் இந்த படத்துல நான் மேக்கப் கூட போட்டது கிடையாது, இந்த படத்தின் மூலமா எனக்கு கிடைச்ச பாராட்டும் வரவேற்பு தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது அதுக்கப்புறம் என்னோட படங்கள்ல நான் மேக்கப் போட்டதும் கிடையாது மேக்கப் போடாம இருக்கிறது எனக்கு தன்னம்பிக்கை கொடுக்குது, சில பேர் மேக்கப் போடத்தான் செய்வாங்க அது அவங்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்குது அதுல எந்த தவறும் கிடையாது அப்படின்னு சொல்லி உங்களுக்கு எது தன்னம்பிக்கை கொடுக்குதோ அதை நீங்க பண்ணுங்க அப்படின்ற கருத்தையும் சொல்ல வராங்க சாய்பல்லவி.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News