நடிகர் மாதவனின் குடும்பத்திற்கு கொரோனா! அவரே வெளியிட்ட டுவிட்டர் பதிவு!
By : Amritha
சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்தவகையில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நேற்று சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கும், தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தமிழ் திரையுலகில் விஷால், சரத்குமார் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அறிந்ததே.மேலும் நடிகர் மாதவன் சமீபத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்தநிலையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.