எனது இளைய மகள் இவர்தான் - ஷகிலா கூறிய நெகிழ்ச்சியான அறிவிப்பு!
By : Amritha
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் விரைவில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் இறுதிப்போட்டிக்கு அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இன்றும் நாளையும் செலிபிரிட்டி வாரம் நடைபெறுவதால் இந்தவாரத்தில் ஒவ்வொரு குக்-ளும் தங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைத்து வந்துள்ளார்கள்.
ஷகிலா தன்னுடைய மகள் மிலாவையும், கனி தன்னுடைய தங்கை நிரஞ்சனாவையும், தீபா தன்னுடைய உறவினரையும், பவித்ரா தன்னுடைய நண்பரையும், தர்ஷா தன்னுடைய அம்மாவையும், மதுரை முத்து தன்னுடைய நண்பர் ஆதவனையும், அஸ்வின் தன்னுடைய நண்பர் சாண்டி மாஸ்டரையும், ரித்திகா அவரது அம்மாவையும் அழைத்து வந்துள்ளார்கள்.
எனவே நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது திடீரென பவித்ரா அழத்தொடங்கினார். இதனை அடுத்து புகழ் உள்பட அனைவரும் பதறி போய் ஏன் அழுகிறாய் என்று கேட்டபோது எல்லோரும் உறவினர்களுடன் வந்திருக்கின்றார்கள் என்றும் அதனால் தனக்கு அம்மா ஞாபகம் வந்து விட்டதாக கூறினார். பவித்ராவின் அம்மா சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வரமுடியவில்லை என்பதால் அவர் வருத்தத்தில் கண்ணீரிவிட்டார் என்பது ப்ரோமோவில் காட்டப்பட்டது.
இதனை அடுத்து இதை பார்த்த செஃப் வெங்கடேஷ்பட், உடனே தற்போது ஷகிலா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறினார். உடனே ஷகிலா நேராக பவித்ராவிடம் சென்று மிலா தனது மூத்த மகள் என்றால், பவித்ரா என்னுடைய இளைய மகள் என்றும், நீ யாரும் இல்லை என்று கவலைப்படாதே, நான் இருக்கிறேன் உனக்கு அம்மாவாக என்றும் ஷகிலா கூறியது அனைவரையும் நெகழ்ச்சிப்படுத்தியது. இதனையடுத்து பவித்ரா, ஷகிலாவை கட்டியணைத்து கொண்ட காட்சி ரசிகர்களையும் உருக வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.