"குக் வித் கோமாளி" வின்னர் யார் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்!
By : Amritha
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி நிகழ்ச்சியில் சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு மொத்தம் ஐந்து நபர்களான பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், பவித்ரா, ஷகிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடந்து முடிந்துள்ளதாகவும், அதில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்கள் பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஐந்து போட்டியாளர்களில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் ரன்னராக ஷகிலாவும், இரண்டாவது ரன்னராக அஸ்வினும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் வெற்றி பெற்ற கனிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.