அந்நியன் படத்தின் 'இந்தி ரீமேக்' பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்!
By : Amritha
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் 'அந்நியன்' கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி சாதனையை படைத்தது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில் 15 வருடங்களுக்கு முன்பே 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.மேலும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்த இந்த படத்திற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்போவதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இந்த தகவலை இயக்குனர் ஷங்கர் அவரது ட்விட்டர் பக்கத்தில் 'அந்நியன்' படத்தின் இந்தி ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழில் விக்ரம் நடித்த வேடத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாகவும், இப்படம் ஹிந்தியில் உருவாக்குவது குறித்து அதிக மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.இதை அறிந்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.