ஒரே நாளில் ரிலீஸாகும் விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள்!
By : Amritha
தமிழ் சினிமாவில் நடிகர்களான விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருப்பதாக கோலிவுட் திரையுலகில் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படம் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'கோடியில் ஒருவன்' திரைப்படமும் அதே நாளில் முதன்முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் என்ன ஆகும் என்றும் வசூல் பாதிக்கப்படுமா என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.