ஷங்கர், வெற்றிமாறன், ஜெயம்ரவி தலா 10 லட்சம் கொரோனோ நிதியுதவி!
By : Mohan Raj
கொரோனோ பேரிடர் கால நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்டோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை மிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு நிவாரண நிதி வேண்டி அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
முதல்வரின் கோரிக்கையை ஏற்று வெளிநாடுவாழ் தமிழர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், கட்சித் தலைவர்கள் தொடங்கி சாதாரண கடைநிலை ஊழியர் வரை நிதியுதவி வழங்கி வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்தவர்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
தற்போது இயக்குநர் ஷங்கர், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் நிதியுதவி அளித்துள்ளனர். வெற்றிமாறன், ஷங்கர், ஜெயம் ரவி என மூவரும் தலா ரூ.10 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.