யூடியூப் ரெக்கார்டுகளில் அடிச்சுதூக்கும் விஜய் - அதிகமான 100 மில்லியன் பாடல்கள் விஜய் வசம்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அதிகமான 100 மில்லியன் பாடல்களை தன்வசம் வைத்து விஜய் முதலிடத்தில் உள்ளார்.
விஜய்யின் ஆரம்ப காலம் முதலே படத்தில் பாடல்கள் ஹிட்டாவது வழக்கம், அந்த வகையில் தற்பொழுது ஒரு பாடல் எந்த அளவிற்கு ஹிட் ஆகிறது என்பது யூடியூபில் அதன் பார்வையாளர்களை பொறுத்தே அமைகிறது! அப்படிப் பார்க்கும் பொழுது விஜயின் பாடல்களே அதிகமாக யூடியூப்பில் ஹிட் வரிசையில் உள்ளன.
அந்தவகையில் 100 மில்லியன் அதிகமான பார்வையாளர்கள் கடந்த வரிசையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்', மெர்சலில் இடம்பெற்ற 'ஆளப்போறான் தமிழன்', பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குது', பிகில் 'வெறித்தனம்', தெறி படத்தில் 'என் ஜீவன்' போன்ற பாடல்கள் தான் யூடியூபில் அதிகம் பேர் பார்த்து ரசித்த பாடலாக இடம் பிடித்துள்ளன. 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த அதிக பாடல்கள் தமிழ் சினிமாவில் விஜய் வசமே உள்ளது.