Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவில் மட்டும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர்

அமெரிக்காவில் மட்டும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர்

Mohan RajBy : Mohan Raj

  |  11 April 2022 9:32 AM GMT

இந்தியத் திரைப்படங்களில் அமெரிக்காவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற சாதனையை ஆர்.ஆர்.ஆர் நிகழ்த்தியுள்ளது.





இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் படம் இதுவரையில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படம் இன்னும் அதிகம் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கும் நிலையில் அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் நிகழ்த்திய வசூல் சாதனை தற்பொழுது வெளியாகி உள்ளது.



தற்பொழுது ஆர்.ஆர்.ஆர் படம் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் கடந்த 15 நாட்களில் சுமார் 13.5 மில்லியன் யு.எஸ் டாலர் இந்தப் படம் வசூலித்தது, இப்பொழுது யு.எஸ் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 100 கோடி வசூலை கடந்த இரண்டு முக்கிய படங்களும் ராஜமௌலி இயக்கிய படங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News