வசூலில் சாதனை படைத்த ஆர்.ஆர்.ஆர் - 1000 கோடியை அசால்ட்டாக தட்டியது

மாபெரும் வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் படம் 1000 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், அலியா பட் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். பான்-இந்தியா படமாக வெளியான இப்படம் இந்தியாவில் வெளியான அனைத்து மொழிகளிலும் பெரும் வெற்றி பெற்றது. 2D, 3D என இரண்டு பிரிண்ட்கள் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் 25'ம் தேதி வெளியான ஆர்.ஆர்.ஆர். படம் இதுவரை 1000 கோடி ருபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை அதிகாரபூர்வமாக படக்குழு மும்பையில் விழா எடுத்து கொண்டாடியுள்ளது, இந்த விழாவில் இயக்குனர் ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு முன் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' 1800 கோடி ருபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.