Begin typing your search above and press return to search.
ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்க என்.பி.கே-107 படத்தை துவக்கிய பாலகிருஷ்ணா

By :
தெலுங்கு முன்னணி நாயகன் பாலகிருஷ்ணாவின் 107 வது படத்தின் பூஜை நேற்று நடந்தது.
தெலுங்கில் இன்னமும் முன்னணி கதாநாயகர்களுக்கு சவாலாக விளங்குபவர் பாலகிருஷ்ணா, இவர் நடித்த 'அகாண்டா' படம் கடந்த ஆண்டு வெளிவந்து பெரிய வசூலை வாரி குவித்தது, 100 கோடியை தாண்டிய வசூலால் தெலுங்கின் பல இளம் கதாநாயகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர், தற்பொழுது பாலகிருஷ்ணா 'அகாண்டா' இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் புதிய படத்தின் பூஜையை என் டி பாலகிருஷ்ணா நேற்று நடத்தியுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் சிர்சிர்லா நகரில் இந்த படத்திற்கான பூஜை நடந்தது, என்.பி.கே 107 என இப்போதைக்கு தற்காலிக பெயர் வைத்துள்ள இந்த படத்தை கோபிசந்த் இயக்குகிறார் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிக்கிறார்.
Next Story