Kathir News
Begin typing your search above and press return to search.

பாவனா! ரொம்ப பாவம் னா... ஒரேயடியாக 12 கிலோ உடல் எடையை இழக்க காரணம் என்ன?

பாவனா! ரொம்ப பாவம் னா... ஒரேயடியாக 12 கிலோ உடல் எடையை இழக்க காரணம் என்ன?
X

MuruganandhamBy : Muruganandham

  |  1 May 2021 12:21 PM GMT

தமிழில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி தீபாவளி, வெயில், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாவனா. வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாரட்டுகள் கிடைத்தது. தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்தது.

2002ஆம் ஆண்டில் நடிக்க தொடங்கியதில் இருந்து இன்று வரை, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் மட்டும் சினிமா பக்கம் தலைகாட்டி வருகிறார். பல படங்களில் பிசியாக நடித்து வந்த இவரை நடிகர் திலீப் குமார் தன்னுடைய அடியாட்களை வைத்து பாவனாவை காரில் வைத்து மானபங்கம் செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2018 ம் ஆண்டு கன்னட சினிமா தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கொஞ்சம் எடை கூடிய பாவனா தற்போது தன்னுடைய உடல் எடையில் 12 கிலோவை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பரபரப்போடு கன்னடத்தில் பாவனா நடித்த இன்ஸ்பெக்டர் விக்ரம், பஜ்ரங்கி 2, கோவிந்தா கோவிந்தா, ஸ்ரீ கிருஷ்ணா அட் ஜிமெயில் டாட் காம் ஆகிய படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News