"ரவுடி பேபி" சாதனையை 12 நாட்களில் தட்டி தூக்கிய "அரபிக்குத்து"!

யூடியூபில் பிரபலமான "ரவுடி பேபி" பாடலின் சாதனையை 'பீஸ்ட்' படத்தில் வரும் "அரபிகுத்து" பாடல் முறியடித்துள்ளது.
தற்பொழுது ஒரு பாடல் ஹிட்டாகிறது என்பது யூடியூபில் எந்த அளவுக்கு பார்வையாளர்களை கொண்டுள்ளது என்பதை பொறுத்தே அமைகிறது, அந்த வகையில் "மாரி 2" படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ் எழுதி சாய்பல்லவி உடன் ஆட்டம் போட்ட "ரவுடிபேபி" பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகள் என்ற புதிய சாதனையை படைத்தது. அதற்குப் பிறகு எத்தனையோ பாடல்கள் வந்தாலும் "ரவுடிபேபி" சாதனையை முறியடிக்க படாமலேயே இருந்தது.
இந்நிலையில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் எழுதி அனிருத், ஜோனிட்டா காந்தி பாடிய "அரபிக்குத்து" பாடல் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது இதுவரையில் தென்னிந்திய பாடல்களில் "ரவுடிபேபி" பாடல் 1300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது, இதன் சாதனையையும் விரைவில் "அரபிக்குத்து" பாடல் முறியடிக்கும் என தெரிகிறது.