அக்டோபர் 13'ம் தேதி தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கிறது பீஸ்ட் சர்ப்ரைஸ் !

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கிய நிலையில் அதன்பிறகு சென்னை தற்பொழுது டெல்லி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதில் தற்பொழுது சென்னையில் விஜய் - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து அடுத்தபடியாக வில்லனுடன் விஜய் மோதும் அதிரடியான சண்டை காட்சிகளுக்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளனர். இதுமட்டுமல்லாமல் அக்டோபர் 13-ந்தேதி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் அவரது போஸ்டர் வெளியாகிறது. அதையடுத்து ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14-15 ஆகிய தேதிகளிலும் பீஸ்ட் படத்தின் முக்கியமான இரண்டு அப்டேட்கள் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.