நிவாரணம் வழங்குவதிலும் மாஸ் காட்டும் கே.ஜி.எஃப் ஹீரோ யாஷ் - 1.5 கோடி வழங்கும் ராக்கி பாய்!
By : Mohan Raj
கே.ஜி.எஃப் திரைப்படம் போன்றே நிவாரண நிதி வழங்குவதிலும் பிரம்மாண்டத்தை காண்பித்துள்ளார் கன்னட நடிகர் யாஷ், கன்னட திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ.1.5 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளார். கே.ஜி.எஃப் நடிகர் யாஷ்.
கன்னட திரையுலகில் மட்டுமல்லாது இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் கே.ஜி.எஃப், பிரம்மாண்ட படமான இதில் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் கொரோனோ இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையுலக தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். பல தங்களால் இயன்றதை உதவி வரும் நிலையில். கன்னட நடிகர் பெரிய தொகையை கொடுத்து உதவ போவதாக அறிவித்துள்ளார்.
3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் ஒன்றரை கோடி ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.