ஜூலை 15 தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்ட செய்தி!
By : Mohan Raj
வலிமை படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகியவை தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் வரும் ஜூலை 15-ஆம் தேதி வலிமை 'அப்டேட்' கிடைக்கும் என தெரிகிறது.
இயக்குனர் வினோத் இயக்கத்தில், 'தல' அஜித் நடிக்கும் வலிமை படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் தகவலை பற்றி சமூக வலைதளத்தில் கேள்வி எழும்பாத நாட்களே இல்லை எனலாம் அந்தளவிற்கு தமிழ் சினிமா'மில் தற்காலங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்றால் அது 'வலிமை' மட்டுமே. அந்தளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது வலிமை படம்.
மேலும் படத்தை பற்றி முதல் தகவல் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் வரும் ஜூலை 15-ஆம் தேதி 'வலிமை முதல் பார்வை அல்லது மோஷன் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் பூர்த்தி செய்வாரா தயாரிப்பாளர் போனிகபூர் என பார்க்கலாம்.