ஆர்.சி 15 படத்தை பல கோடிகள் கொட்டி டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்

ஷங்கர் இயக்கும் ராம்சரண் படத்தை பிரபல நிறுவனம் 200 கோடிக்கு வாங்கியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக இயக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடிக்கிறார். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வரவிருக்கும் இப்படத்தின் வேலைகள் பிரம்மாண்டமாக நடந்து வருகின்றது. ஒரு பாடலுக்காக இயக்குனர் ஷங்கர் பல கோடிகள் செலவழித்துள்ளார். படத்தின் மொத்த பட்ஜெட் 170 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் உரிமையை கைப்பற்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில் ஆர்.சி 15 என தற்காலிமாக பெயரிடப்பட்ட இப்படத்தை ஜீ நெட்வெர்க் நிறுவனம் டிஜிட்டர் உரிமையாக 200 கோடி கொட்டி வாங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை இந்நிறுவனமே வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் முன் இன்னும் பல கோடிகளில் வியாபாரம் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.