புனித் மறைவின் தாக்கம் - 15 நாட்களில் 78 ரசிகர்கள் கண்தானம் !

புனித் ராஜ்குமார் மறைவுக்கு பின் 15 நாட்களில் 78 பேர் கண்தானம் செய்துள்ளனர்.
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த மாதம் அக்டோபர் 29'ம் தேதி மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்தாலும் தனது 2 கண்களையும் தானம் செய்திருந்தார். புனித் ராஜ்குமாரின் 2 கண்கள் மூலமாக 4 பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் பெருமைபட்டனர். இதன் விளைவாக அவரின் வழிப்படியே அவரது ரசிகர்கள் கண்தானம் செய்ய துவங்கியுள்ளனர்.
அதன்படி பெங்களூரு நாராயண நேத்ராலயா மருத்துவமனையில் மட்டும் 15 நாட்களில் 78 பேர் தங்களது கண்களை தானம் செய்திருக்கிறார்கள். அந்த மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 100-க்கும் குறைவானவர்களே சராசரியாக கண் தானம் செய்துவந்துள்ளனர். ஆனால் புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு 15 நாட்களில் 78 பேர் தாங்களாகவே வந்து கண்களை தானம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.