வெளியானது சூப்பர் ஸ்டார் 169 படத்தின் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த பட அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் இதுவரை 168 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த படம் அண்ணாத்த கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது, இந்த நிலையில் இவரின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற பரபரப்பு ரசிகர்களிடம் நிலவி வந்த நிலையில் இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சூப்பர் ஸ்டாரின் 169 திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது. மேலும் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் எனவும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் எனவும் அறிவித்து அதற்கான ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம், அந்த வீடியோவில் முதலில் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகிய இருவரமே நின்று கொண்டிருக்கையில் தனக்கே உரித்தான ஸ்டைலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணாடி அணிந்து அமர்ந்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.