Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியன்-2 பட விவகாரத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

இந்தியன்-2 பட விவகாரத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

AmrithaBy : Amritha

  |  15 April 2021 1:37 PM GMT

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வந்த 'இந்தியன் 2' திரைப்படம் திடீரென நிறுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஷங்கர், ராம்சரண் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்று செய்திகள் வெளியானது.


இந்த நிலையில் 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட்டில் சமீபத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஷங்கர் வேறு படங்களை இயக்கக் கூடாது என இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் அறிந்ததே.





எனவே தற்போது வெளிவந்துள்ள தகவன்படி இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க ஷங்கருக்கு தடை கோரிய வழக்கில் மேல்முறையீடு செய்ய தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து விரைவில் லைக்கா நிறுவனம் இந்த வழக்கை மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News