வேண்டாத வேலை பார்த்த மன்சூர் அலிகான்! ரூ.2 லட்சம் ரெடியா இருக்கணும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் மக்களிடையே பயத்தை உண்டாக்கும் வகையில் தடுப்பூசி குறித்து பேட்டியளித்திருந்தார்.
கொரோனா தொற்று என இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
மன்சூர் அலிகானின் பேட்டி, அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் கொடுக்கப்படும் என்பது தெரிந்தே, முன்கூட்டியே ஜாமீன் வேண்டி விண்ணப்பித்திருந்தார் மன்சூர் அலிகான். முன் ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகானின் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இது போன்ற வதந்திகளையும், அச்சத்தையும் மக்களிடையே பரப்ப கூடாது என தெரிவித்த நீதிபதி, மேலும் சில அறிவுரைகளை கூறி நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.
பொதுமக்களுக்கான கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் 2 லட்ச ரூபாய்க்கான வரைவோலையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.