நாளை வெளியாகிறது 'தி ஃபேமிலி மேன் 2' ட்ரைலர்!
By : Mohan Raj
'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் ட்ரைலர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ். உளவுத்துறையில் பணியாற்றும் நடுத்தர வர்க்கத்து ஆண் பணிச்சுமையையும், குடும்ப சுமையையும் எவ்வாறு திறமையாக கையாளுகிறான் என்பதே கதைக்கரு. கூடவே இந்திய தேசத்தின் தீவிரவாத அச்சுறுத்தல், குழந்தைகளின் மனம் போகும் போக்கு, மத அரசியல் என சமுதாயத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நல்ல முறையில் திரைக்கதை கையாளப்பட்டிருக்கும்.
தற்பொழுது 'தி ஃபேமிலி மேன் 2' வெளியாக இருக்கிறது. இதன் ட்ரைலர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூடவே இதில் நடிகை சமந்தா புதிதாக கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அடுத்த ஜூன் முதல் வாரத்தில் ஓடிடி தளத்தில் 'தி ஃபேமிலி மேன் 2' ரிலீஸ் இருக்கலாம் என தெரிகிறது.