"எனக்கு முழு கதையே தெரியாது" - தி பேமிலி மேன் 2 'செல்லம் சார்' உதய் மகேஷ்!

"எனக்கு கதையை தெரியாமல் தான் நடித்தேன், ஆனால் என் கதாபாத்திரம் இவ்வளவு வரவேற்ப்பு பெறும் என நினைக்கவில்லை" என 'தி பேமிலி மேன் 2' இணைய தொடரில் நடித்த உதய் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அமேசோன் ப்ரேம் ஓ.டி.டி தளத்தில் சமீபத்தில் வெளியாக சிறப்பான வரவேற்ப்பை பெற்ற இணைய தொடர் 'தி பேமிலி மேன் 2'. மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி, அழகம் பெருமாள், உதய் மகேஷ், திவ்யதர்ஷிணி என பெரும்பாலும் தமிழ் மொழி சார்ந்த நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தாலும் குறிப்பாக கதாநாயகன் மனோஜ் பாஜ்பாய்'க்கு உதவும் 'செல்லம் சார்' கதாபாத்திரத்தில் உதய் மகேஷ் அவர்கள் நடித்திருந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது. மிக சொற்ப நிமிடங்களே வரும் இவரின் கதாபாத்திரம் கதையின் போக்கை அவ்வபோது மாற்றி விறுவிறுப்பு ஏற்படுத்தி விடும். இதனால் இவரை பற்றிய மீம்ஸ் இணையத்தில் அதிகமாக வலம் வர துவங்கியுள்ளது.
ஒரு தனியார் பத்திரக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, "செல்லம் சார் கதாபாத்திரம் இயக்குனர் ராஜ் மற்றும் டி.கே கூறியபடியே செய்தேன். மற்றபடி முழு கதை ஏதுவும் எனக்கு தெரியாது. ஆனால் இப்பொழுது வரும் விமர்சனங்களையும், இணைய மீம்ஸ்'களையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.