'கே.ஜி.எஃப் 2' உடன் மோதும் 'புஷ்பா'!
By : Mohan Raj
கிருஸ்துமஸ் விடுமுறையில் இரு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கின்றன.
கொரோனோ காரணமாக இந்த ஆண்டின் முற்பகுதியில் இந்திய அளவில் பெரிதாக ஏதுவும் படங்கள் வெளியாகவில்லை. 2021'ம் ஆண்டின் பிற்பகுதியில் தென்னிந்திய அளவில் மட்டுமல்ல இந்திய அளவில் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய கன்னடத்தில் தயாராகியுள்ள 'கேஜிஎப் 2', தெலுங்கில் தயாராகியுள்ள 'புஷ்பா' ஆகிய இரண்டு படங்களும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளன.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. அதன் முதல் பாகத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யஷ் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தையும் அதே விடுமுறையில் வெளியிடப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இப்படி இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் காரணத்தினால் திரையரங்குகள் கிடைக்காமல் போக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகினை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.