'சந்திரமுகி 2' வில் சூப்பர் ஸ்டார் நடிக்கிறாரா? இயக்குனர் பி.வாசு'வின் தகவல்!

'சந்திரமுகி 2'வில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கிறாரா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் பி.வாசு.
2005 வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'சந்திரமுகி', தமிழ் சினிமாவில் பேய் படங்களின் 'ட்ரெண்ட் செட்டர்' என கூறலாம். இதன் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தவலுக்கு இயக்குனர் பி.வாசு சமீபத்திய பேட்டியில் கூறுகையில், "சந்திரமுகி 2-ம் பாகத்துக்கான கதை, திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடக்கிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சிக்கான இணைப்பு சரியாக அமைய வேண்டும் என்பதால் அவசரப்படாமல் வேலை செய்கிறோம். அடுத்த மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிவடையும். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
சந்திரமுகி படத்தில் நடித்தவர்கள் 2-ம் பாகத்தில் கிடையாது. ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் உண்மை இல்லை. 'சந்திரமுகி 2' படத்தின் கதை வேறு மாதிரி இருக்கும்" என்றார் அவர்.