புஷ்பா 2 படப்பிடிப்பு எப்போது?

புஷ்பா முதல் பாகம் பெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளை படக்குழுவினர் விரைவில் தொடங்க இருக்கின்றனர்.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் 'புஷ்பா' இதன் முதல் பாகம் உலக அளவில் மொத்தமாக 350 கோடி ரூபாய் வரை வசூலித்து. pan-india படமாக 5 மொழிகளில் வெளியான 'புஷ்பா' மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்த பாகம் வெளிவரவிருக்கும் நிலையில் அதன் படப்பிடிப்பு எப்போது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் வரும் மே மாத இறுதியில் புஷ்பாவின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார் ஆகியோருக்கு சம்பளம் கூடுதலாக அளிக்கவும் தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. புஷ்பா ஹிந்தியில் வெற்றியடைந்ததால் ஹிந்தி பதிப்பு உரிமையை முழுவதுமாக அல்லு அர்ஜுனுக்கு கொடுத்துவிட தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது இது அல்லு அர்ஜுன் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.