Kathir News
Begin typing your search above and press return to search.

உலக பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இடம்பெற்ற 'கே.ஜி.எப் 2' - கன்னட திரையுலகை அண்ணாந்து பார்க்க வைத்த ராக்கி பாய்

உலக பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இடம்பெற்ற கே.ஜி.எப் 2 - கன்னட திரையுலகை அண்ணாந்து பார்க்க வைத்த ராக்கி பாய்

Mohan RajBy : Mohan Raj

  |  18 April 2022 10:00 AM GMT

கன்னடத்தில் வெளியான திரைப்படம் உலக பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இடம் பெற்ற பெருமையை 'கே.ஜி.எப் 2' தற்பொழுது பெற்றுள்ளது.




இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா தாண்டன் நடிப்பில் வெளியாகி இந்தியாவில் பெரும் வெற்றியடைந்த திரைப்படம் 'கே.ஜி.எப் 2', 'கே.ஜி.எஃப்'ன் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக வெளியான இத்திரைப்படம் தற்பொழுது நிலவரப்படி 500 கோடி என்ற இமாலய வசூலை கடந்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே 100 கோடி வசூலை பெற்ற கே.ஜி.எப் இந்திய திரையுலகில் அனைவரையும் தற்பொழுது அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.




இந்நிலையில் உலக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'கே.ஜி.எப் 2' படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது, கடந்த வார நிலவரப்படி 'பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்' படம் உலகளவில் 114 மில்லியன் யு.எஸ் டாலர் வசூலித்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது இடத்தில் 'கே.ஜி.எப் 2' 70 மில்லியன் யு.எஸ் டாலர் வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கன்னட திரையுலகில் வெளியான ஒரு படம் உலக பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்திருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News