சிவகார்த்திகேயனால் எனக்கு 20 கோடி நஷ்டம் - நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஞானவேல்ராஜா
By : Mohan Raj
சிவகார்த்திகேயன் மூலம் 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சிவகார்த்திகேயன் 'மிஸ்டர்.லோக்கல்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 4 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாகவும், அந்த 4 கோடி ரூபாயை ஞானவேல் ராஜாவிடம் இருந்து மீட்டுத் தருமாறும் அது வரையில் அவர் தயாரிக்கும் படங்களின் வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார், அதில் 'மிஸ்டர்.லோக்கல்' பணத்தால் எனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த கதையை எனக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் சிவகார்த்திகேயன் கட்டாயத்தால் அந்த படத்தை தயாரித்தேன், உண்மை நிலவரம் இப்படியிருக்க படம் வெளியாகிய சில ஆண்டுகளுக்கு பின் இப்போது வழக்கு தொடர்வது ஏன் என கேட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் சிவகார்த்திகேயனுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.